இளைஞன் படத்தில் நமீதாவை நடிக்க வைக்கலாம் என்று சிபாரிசு செய்தவர் முதல்வர் கருணாநிதியாம். இதை நமீதாவே தனது வாயால் கூறியுள்ளார்.
இளைஞன் படத்தில் வில்லத்தனமான ரோலில் நடிக்கிறார். இதில் யாரை நடிக்க வைக்கலாம் என்ற டிஸ்கஷன் வந்தபோது நமீதாவை நடிக்க வைக்கலாம் என முதல்வர் கருணாநிதிதான் சிபாரிசு செய்தாராம். இளைஞன் படத்தின் வசனத்தை முதல்வர்தான் எழுதுகிறார் என்பது நினைவிருக்கலாம்.
இதை தனது வாயால் கூறி பொங்கிப் பொங்கி மகிழ்கிறார் நமீதா. இது குறித்து அவர் கூறுகையில், “முதல்வரே என்னைத் தேர்வு செய்திருப்பது பெரும் கெளரவமாக கருதுகிறேன். நிச்சயம் அவரது எதிர்பார்ப்புக்கேற்ப நடிப்பேன். என்னால் முடிந்தவரை சிறப்பாக செய்வேன். இப்படத்தில் நான் ஆங்கிலோ இந்தியப் பெண்ணாக வருகிறேன். 1940-களில் கதை நடப்பது போல உள்ளது. படையப்பா படத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணனைப் போன்ற கேரக்டர் எனக்குக் கிடைத்துள்ளது. இயக்குநர் சுரேஷ்கிருஷ்ணா மிகவும் சிறந்த இயக்குநர். பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தவர். அவருடன் பணியாற்றுவது சந்தோஷமாக உள்ளது” என்றார் நமீதா. |