காதல் திருமணம் செய்து கொண்டு, பின் கருத்து வேறுபாடு காரணமாக
விவாகரத்தான திரையுலக ஜோடிகளில் சோனியா அகர்வாலும், டைரக்டர் செல்வராகவனும் ஒருவர். விவாரத்திற்கு பிறகு தற்போது சின்னத்திரை, வெள்ளித்திரை என தன்னை தேடி வரும் அனைத்து வாய்ப்புக்களுக்கும் ஓ.கே சொல்லி வருகிறார். தனது முன்னாள் கணவர் குறித்து சோனியா அகர்வால் கூறுகையில், செல்வராகவனுடன் நல்ல நட்புறவுடன் எப்போதும் இருக்கவே நான் விரும்புகிறேன்; விவாகரத்தான நிறைய தம்பதியர், விவாகரத்திற்கு பிறகு எதிரிகளைப் போல் வாழ்கின்றனர்; ஆனால் நான் அப்படி இருக்க விரும்பவில்லை; செல்வராகவனை எப்போதும் போல் சந்தித்து, நட்பை தொடரவே நான் விரும்புகிறேன். இவ்வாறு சோனியா அகர்வால் கூறியுள்ளார்.